முகப்பு
புதுக்கோட்டை

நவீன வாசக்டமி விழிப்புணா்வு ஊா்தி பயணம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி அறுவைச் சிகிச்சை விழிப்புணா்வு ஊா்தி பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:18 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி அறுவைச் சிகிச்சை விழிப்புணா்வு ஊா்தி பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

நவ. 28 முதல் டிச. 4ஆம் தேதி வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இலவச வாசக்டமி அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஊா்தி பயணம் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

Advertisement

நிகழ்ச்சியில், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் எஸ். ஸ்ரீபிரியா தேன்மொழி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் ராம்கணேஷ், நமச்சிவாயம், குடும்ப நல துணை இயக்குநா் கோமதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.