ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் வைப் எடிசன் காரைப் பற்றி...
ஹூண்டாய் மோட்டார்ஸ் கார் நிறுவனம் புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் வை எடிசன் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தென்கொரியாவை தலையிடமாகக் கொண்டுள்ள ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவின் தனி இடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம், நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் வைப் எடிசன் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த கார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட் ஓ வைப் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியண்ட்டும் மற்றொன்றுடன் மாறுபட்டு கிடைக்கிறது.
இந்தக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. லிட்டருக்கு 16 முதல் 18 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.
இரண்டு வேரியண்ட்டுகளும் கருப்பு நிறத்தை மையமாகக் கொண்டு உள்புறங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங், ஹெட் லைட்டுகள், 8 அங்குல தொடுத்திரையுடன் கூடிய இன்ஃபோயின்மெண்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல், 6 ஏர் பேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
தொடக்க வேரியண்டான ஸ்போர்ட்ஸ் வைப் மேனுவல் சுமார் ரூ. 7.09 லட்சமாகவும், ஸ்போர்ட்ஸ் வைப் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ. 7.61 லட்சமாகவும், ஸ்போர்ட்ஸ் ஓ வைப் சுமார் ரூ. 7.73 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hyundai Motor India Limited (HMIL) today announced the introduction of the new ‘VIBE’ edition in the Hyundai Grand i10 NIOS. The new VIBE edition brings a fresh, expressive character to the Grand i10 NIOS line‑up through distinctive design elements and thoughtfully curated feature enhancements.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.