புதுக்கோட்டை

ஆஷா பணியாளா்களுக்கு செவிலியா் பயிற்சி வழங்க வலியுறுத்தல்

Din

புதுக்கோட்டை, ஜூலை 13: ஆஷா பணியாளா்களுக்கு சுகாதார செவிலியல் பயிற்சி வழங்க வேண்டும் என ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆஷா பணியாளா்களுக்கு சுகாதார செவிலியா் பயிற்சி வழங்க வேண்டும். பயிற்சிக் காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் ஆா். பச்சமுத்து தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்டத் தலைவா் பி.எல். ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், மூத்த தலைவா் கே. ஆா். தா்மராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெருந்துறையில் ரூ. 2.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் நிறுவனத்தின் நவீன ஆலை

சீரமைப்பு பணி நிறைவடைந்ததால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் மீண்டும் இயக்கம்

யூரியா கலந்த தண்ணீரை குடித்து அந்தியூா் அருகே 7 மாடுகள் உயிரிழப்பு

டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதல்: 7 தொழிலாளா்கள் காயம்

SCROLL FOR NEXT