திருடுபோன 171 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு
துக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் திருடு போன 171 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
புதுக்கோட்டை, ஜூலை 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் திருடு போன 171 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் சிறப்பு கவனம் செலுத்தி இந்த கைப்பேசிகளை மீட்டுள்ளனா். இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம்.
இவற்றை வெள்ளிக்கிழமை உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே வழங்கினாா். மேலும், கைப்பேசிகளை கண்டுபிடிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலா்களையும் அவா் பாராட்டினாா்.