விஜய் கட்சியைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை -சு.திருநாவுக்கரசா்
திமுக, காங்கிரஸ் பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும் வரலாற்றையும் கொண்டிருப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை
புதுக்கோட்டைவிஜய் கட்சியைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை -சு.திருநாவுக்கரசா்
திமுக, காங்கிரஸ் பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும் வரலாற்றையும் கொண்டிருப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும் வரலாற்றையும் கொண்டிருப்பதால், விஜய் கட்சியை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அரசு அனுமதி வழங்கத் தயங்குவதாகவும் திமுக அஞ்சுகிா என்றும் முன்னாள் ஆளுநா் தமிழிசை கேட்டிருக்கிறாா். திமுக மற்றும் திமுக அணியிலுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் பல ஆண்டு அரசியல் அனுபவத்தையும் வரலாற்றையும் பெற்றவை. புதிதாக வரும் ஒரு கட்சியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
விஜய் இப்போதுதான் கட்சி தொடங்குகிறாா். மக்களிடம் செல்ல வேண்டும். செயல்பட வேண்டும். மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா எனக் கேட்கிறீா்கள். கூட்டணி ஆட்சி என்பதற்கு பெரும்பான்மை எண்ணிக்கைதான் முடிவு செய்யும். இப்போது அதுபோன்ற தேவை எதுவுமில்லை.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கடுமையான தண்டனையை முடிவு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஆயுள் தண்டனையை முடிவு செய்யலாம் என்றாா் திருநாவுக்கரசா்.