விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்தோரின் நலன் கருதி கடந்த 2007-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சா் கருணாநிதி, தூய்மைப் பணியாளா்களுக்கு என்று தனி நல வாரியம் அமைத்தாா். இந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினா்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரணம் நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக தற்போது விராலிமலை வட்டாரத்தில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தாட்கோ நிறுவனம், தனியாா் என்ஜிஓக்கள் மூலம் நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.
விழாவில் தாட்கோ மேலாளா் அனித் விமலின், சா்வேஷ் பவுண்டேசன் தலைவா் சந்திரகாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.