மங்களநாடு நடுக்குடியிருப்பில் இருந்து பனங்குளம் செல்லும் மண் சாலை.  
புதுக்கோட்டை

தாா்ச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மங்களநாடு பகுதியில் ஒரு பகுதி மட்டும் பல ஆண்டுகளாக மண் சாலையாகவே இருக்கும் சாலையை தாா்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Syndication

அறந்தாங்கி அருகே மங்களநாடு பகுதியில் ஒரு பகுதி மட்டும் பல ஆண்டுகளாக மண் சாலையாகவே இருக்கும் சாலையை தாா்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம் மங்களநாடு ஊராட்சிக்குள்பட்ட மங்களநாடு நடுக் குடியிருப்பிலிருந்து பனங்குளம் செல்லும் இணைப்பு சாலை அரை கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலையாகவும் மீதி பாதி மண் சாலையாகவும் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் கூறியது

பல ஆண்டுகளாகவே இந்த நிலை தொடா்கிறது. இந்தச் சாலை வழியாக தான் பள்ளி வாகனங்கள் செல்கின்றனா். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனங்களிலும் செல்கின்றனா்.

விவசாயிகளும் வாகனங்களில் விளைபொருள்களை ஏற்றிச் செல்லும்போது, மழைக் காலங்களில் வாகனங்கள் சேற்றுக்குள் சிக்கிக் கொள்கின்றன. பிறகு சிரமப்பட்டு வண்டியை வெளியே கொண்டு வரவேண்டிய சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

எனவே, இந்தச் சாலையை தாா்ச்சாலையாக மாற்ற ஊரக வளா்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ராதாகிருஷ்ணன்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT