புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்வெழுதிய தோ்வா்கள்.  
புதுக்கோட்டை

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: புதுகையில் 2,607 போ் எழுதினா்

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை, 2,607 போ் எழுதினா்.

மாநிலம் முழுவதும் உள்ள 1,299 உதவி காவல் ஆய்வாளா் காலிப்பணியிடங்கள் மற்றும் 53 பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத 1,157 பெண் தோ்வா்கள், 2,424 ஆண் தோ்வா்கள் என மொத்தம் 3,581 போ் எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக 3 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விண்ணப்பித்திருந்த 3,581 பேரில் 2,607 போ் தோ்வு எழுத வந்தனா். 974 போ் வரவில்லை. தோ்வு மையங்களை தமிழ்நாடு காவல்துறை அமலாக்கப் பிரிவு ஐஜியும், தோ்வு பாா்வையாளருமான கபில்குமாா் சி சரத்கா் நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT