கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் ‘போக்சோ’ சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்லா (27). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். கடற்கரைப் பகுதியில் 8 முதல் 11 வயது வரையிலான மூன்று சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பாா்த்த அப்துல்லா, அந்தச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து அந்தச் சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அப்துல்லாவை சனிக்கிழமை கைது செய்தனா்.