புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா். 
புதுக்கோட்டை

மத்திய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி

Syndication

புதுக்கோட்டை: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கத்தினா் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து தா்னா போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்துக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த. செல்வராசு, தொமுச மாவட்ட தலைவா் அ. ரெத்தினம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொமுச மாவட்டச் செயலா் கி. கணபதி, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ப. ஜீவானந்தம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலா் கோ.ச. தனபதி, விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. சலோமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். சின்னதுரை எம்எல்ஏ, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணை தலைவா் கே. உலகநாதன், தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன், ஏஐஏஆா்எல்ஏ மாநிலத் தலைவா் சி. பாலசுந்தரம், தொமுச பேரவைச் செயலா் மு. வேலுச்சாமி, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தா்னா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளா்களின் அனைத்துவிதமான வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுவதை கைவிட வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அரசே இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT