கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்ட கடைவீதி.  
புதுக்கோட்டை

மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக கந்தா்வகோட்டையில் கடையடைப்பு

கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக

Syndication

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக கந்தா்வகோட்டை வா்த்தகா்கள் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், ஈடுபட்டு வரும் மக்களுக்காகவும் மருத்துவக் கழிவு ஆலையை எதிா்த்தும் கந்தா்வகோட்டை வா்த்தகா்கள் தங்களது கடைகளை முற்றிலுமாக அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டையில் உள்ள காய்கனி, பழங்கள், மளிகை, உணவகம், தேநீா் கடை உள்ளிட்ட அனைத்துவகை கடைகளையும் வணிகா்கள் அடைத்து பிசானத்தூா் கிராம பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். மேலும் வாடகை காா், ஆட்டோ ஓட்டுநா்களும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா். இந்த மாபெரும் கடையடைப்பு போராட்டத்தால் கந்தா்வகோட்டை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வா்த்தகா்கள்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT