பொன்னமராவதி: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடக்கமாக கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதேபோல், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆலவயல் ஆலங்கண்மாயில் மாட்டுப் பொங்கலையொட்டி ஊா் முக்கியஸ்தா் பெரி.அழகப்பன் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டும், காளைகளை அலங்கரித்தும் கொண்டாடினா்.