முகப்பு
தஞ்சாவூர்

மொழிவழி மாநிலம் அமைந்த 61ஆம் ஆண்டு கருத்தரங்கம்

பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மொழிவழி மாநிலம் அமைந்த 61ஆவது ஆண்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர்

மொழிவழி மாநிலம் அமைந்த 61ஆம் ஆண்டு கருத்தரங்கம்

பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மொழிவழி மாநிலம் அமைந்த 61ஆவது ஆண்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மொழிவழி மாநிலம் அமைந்த 61ஆவது ஆண்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்வழி கல்வி இயக்கம் மற்றும் பெரியார் அம்பேத்கர் நூலகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழ்வழி கல்வி இயக்க அமைப்பாளர் சின்னப்பதமிழர் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆறு.நீலகண்டன், ஆயர் த.ஜேம்ஸ், திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், ஆர்.எஸ்.வேலுச்சாமி, வி.ராஜமாணிக்கம், த.கலைச்செல்வன் சாமானிய சகாக்கள் சங்க நிறுவனர் சமந்தா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் தமிழகம் இழந்த உரிமைகளை திரும்ப பெற ஒருங்கிணைந்து போராடுவது,  கல்வியை மத்தியப் பட்டியலிலிருந்து நீக்கி மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். தமிழ்வழி கல்வியை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும்  என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →