முகப்பு
தஞ்சாவூர்

நவ.19-இல் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

தஞ்சாவூர் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான கலைப்போட்டிகள் நவ. 19-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

தஞ்சாவூர்

நவ.19-இல் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

தஞ்சாவூர் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான கலைப்போட்டிகள் நவ. 19-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான கலைப்போட்டிகள் நவ. 19-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் இரா. குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலைப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில்,  சிறுவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் நவ. 19-ஆம் தேதி நடைபெறுகிறது.  
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 - 8,  9-12,  13-16 ஆகிய வயது பிரிவுகளில் உள்ள மாணவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றிதழ்களுடன், அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு நவ. 19-ஆம் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும். இங்கு பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்றிடங்களைப் பெறுவோருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
மாவட்ட கலைப் போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த சிறுவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

முழு கட்டுரையைப் படிக்க →