முகப்பு
தஞ்சாவூர்

விஜயீந்திர சுவாமிகளின் ஆராதனை விழா: நாளை தொடக்கம்

கும்பகோணத்தில் விஜயீந்திர சுவாமிகளின் 404 -வது ஆண்டு ஆராதனை விழா ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கும்பகோணத்தில் விஜயீந்திர சுவாமிகளின் 404 -வது ஆண்டு ஆராதனை விழா ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள், கும்பகோணத்தில் காவிரி கரையில் பிருந்தாவனம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் 404 வது ஆண்டு ஆராதனை விழா ஜூலை 10 ஆம் தேதி பூர்வாராதனையுடன் தொடங்குகிறது.  தொடர்ந்து 11 ஆம் தேதி மத்ய ஆராதனையும், அன்றிரவு மடத்தில் உள்ள கஷ்யப் புஷ்கரணியில் தெப்ப உற்ஸவமும்,  12 ஆம் தேதி உத்தர ஆராதனையும், அன்று காலை பட்டின பிரவேச வீதியுலாவும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளில் மந்த்ராலய மடத்தின் 1008 வது பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் பங்கேற்று மூலராமருக்கு பூஜையும், பக்தர்களுக்கு அருளாசியும் வழங்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.