தஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங் பொறுப்பேற்பு
தென்னக விமானப் பிரிவின் கீழ் இயங்கும் முதன்மைத் தளமான தஞ்சாவூர் விமானப்படை நிலையத் தளபதியாக அணித் தலைவர் பிரஜுல் சிங் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்னக விமானப் பிரிவின் கீழ் இயங்கும் முதன்மைத் தளமான தஞ்சாவூர் விமானப்படை நிலையத் தளபதியாக அணித் தலைவர் பிரஜுல் சிங் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்பு நிலையத் தளபதியாக அணித் தலைவர் விக்ரம் ஜீத் சிங் இருந்து வந்தார். நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அணிவகுப்பு மரியாதைக்குப் பிறகு நிலையத் தளபதியாக பிரஜுல் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரஜுல் சிங் தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவர். இவர் 1992 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் சேர்ந்தார்.
தகுதி பெற்ற விமானப் பயிற்சியாளரான இவர் இயக்கம், நிர்வாகம் மற்றும் சூரியகிரன் விமான சாகச அணி என பல்வேறு பிரிவுகளில் அலுவலராகப் பணியாற்றியவர். ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் ராணுவ, விமானப் பிரிவு அலுவலராகவும் பணியாற்றினார்.
இவரது அர்ப்பணிப்பான பணிக்காக இவருக்கு 2012 ஆம் ஆண்டில் வாயு சேனா விருது வழங்கப்பட்டது.