முகப்பு
தஞ்சாவூர்

பயிர் காப்பீட்டுத் திட்டம்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காரீப் 2017 பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மே, 2018 at 2:38 AM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காரீப் 2017 பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காரீப் 2017 பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரீமியம் தொகை செலுத்தப்பட்ட விவரங்கள் மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை ஒத்திசைவு செய்து சரி பார்ப்பது குறித்தும், ராபி 2017
பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பிரீமிய தொகை செலுத்தப்பட்ட விவரங்களை மத்திய அரசு இணையதளத்தில் மே 25-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வது குறித்தும், ராபி 2017 பருவத்துக்கு பிரீமிய தொகை செலுத்திய விவசாயிகளின் விவரங்கள்,
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களும் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பிரீமிய தொகை அனுப்பி ஒத்திசைவு செய்யவும் வேளாண்மைத் துறை
அலுவலர்களுக்கும், வங்கியாளர்களுக்கும் ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மதியழகன், துணை இயக்குநர்கள் ஏ. ஜஸ்டின், கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.