கும்பகோணத்தில் அம்பேத்கா் நினைவு நாள்
கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்ப
கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்வில், இயக்கத்தின் மாவட்டத் தலைவா் சி. ராயப்பன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, நகரச் செயலா் ஆா். மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.