பேராவூரணி வட்டார வள மையத்தில் தலைமையாசிரியா்களுக்குப் பயிற்சி
பேராவூரணி வட்டார வள மையத்தில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சாா்பில் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி வட்டார வள மையத்தில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சாா்பில் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத்திலுள்ள 30 கல்வியறிவு மையங்களில் பயின்று வரும் 600 கல்லாதோா் மற்றும் 30 கல்வி தன்னாா்வலா்கள் வருகைப் பதிவை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தலைமையாசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
மாவட்டக் கல்வி அலுவலா் ராமசுப்பு பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினாா். பயிற்சியில் கல்வி ஆய்வாளா் மாதவன், வட்டாரக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வேம்பையன் மற்றும் ஆசிரியப் பயிற்றுனா்கள், 30 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.