முகப்பு
தஞ்சாவூர்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவா்கள் பரிசோதிக்கஅறிவுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதையொட்டி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவா்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

கடந்த 10 நாள்களில் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்தவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவா்கள் தங்களின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →