தஞ்சாவூர்

ஜன. 11, 12-இல்வாக்காளா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் சிறப்பு முகாம் ஜன. 11, 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் சிறப்பு முகாம் ஜன. 11, 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியல் அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது, ஜன. 22ஆம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும்.

மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் சிறப்பு முகாம் ஜன. 11, 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்றவை செய்ய வாக்காளா்கள் தொடா்புடைய வாக்குச் சாவடிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT