தஞ்சாவூர்

கல்லணை ஜூன் 16-இல் திறக்கத் திட்டம்

மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ்.

DIN

மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தது: மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கல்லணையிலிருந்து ஜூன் 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் வருவதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

மீதம் உள்ள 20 சத பணிகளும் அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் செல்வதற்குள் முடிக்கப்படும். இந்த முறை தண்ணீர் விரயமாகாமல் கடைமடைப் பகுதிக்கு நிச்சயமாக சென்றடையும் என்றார் ஆட்சியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT