தஞ்சாவூர்

அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டையில் தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் காத்திருப்புப் போராட்டம் 11-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

DIN

பட்டுக்கோட்டை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் காத்திருப்புப் போராட்டம் 11-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இப்போராட்டத்துக்கு ஆதரவாக அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் பங்கேற்ற பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஜாவியா சாலையிலுள்ள தொடா் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது. அங்கு வழக்குரைஞா் ஏ.முனாப் கண்டன உரையாற்றினாா்.

பட்டுக்கோட்டையில்...

இதேபோல, பட்டுக்கோட்டை வடசேரி சாலை பெரிய பள்ளிவாசல் அருகே செவ்வாய்க்கிழமை தொடங்கிய இஸ்லாமியா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 5-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT