முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்காகக் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்காக  திங்கள்கிழமை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Updated On : 18 மே, 2020 at 12:53 PM
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்காக  திங்கள்கிழமை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது முடக்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுக்காக  தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூதலூர் ஆகிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement

 இந்நிலையில், அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதன்படி மேலும் பல அரசு அலுவலர்கள், ஊழியர்கள் திங்கள்கிழமை பணிக்குச் சென்றனர். இதற்காக மாவட்டத்தில் 10 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி இப் பேருந்துகள் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.