தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடக்கம்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஏறத்தாழ 70 நாள்களுக்குப் பிறகு முன் பதிவு சேவை சனிக்கிழமை மாலை தொடங்கியது.
தஞ்சாவூர்தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடக்கம்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஏறத்தாழ 70 நாள்களுக்குப் பிறகு முன் பதிவு சேவை சனிக்கிழமை மாலை தொடங்கியது.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஏறத்தாழ 70 நாள்களுக்குப் பிறகு முன் பதிவு சேவை சனிக்கிழமை மாலை தொடங்கியது.
பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து ஏறத்தாழ 70 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில விரைவு ரயில்களை மட்டும் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதில், தஞ்சாவூர், கும்பகோணம் வழித்தடத்தில் கோவை - மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.
கோவையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூருக்கு பிற்பகல் 12.03 மணிக்கு வந்தடையும். தஞ்சாவூரிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு, கும்பகோணத்துக்கு 12.41 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 1.40 மணிக்கும் சென்றடையும். இதேபோல, மயிலாடுதுறையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கும்பகோணத்துக்கு 3.13 மணிக்கும், தஞ்சாவூருக்கு 3.43 மணிக்கும் வந்தடையும்.
இந்த ரயில் கோவைக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடன் கூடிய மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதையொட்டி, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன் பதிவு சேவை சனிக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கப்பட்டது. இதற்காக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் ஏறத்தாழ 30 பேர் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வரிசையில் நின்று முன் பதிவு செய்தனர். வரிசையை ஒழுங்குப்படுத்தும் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் முன் பதிவு செய்யப்படுகிறது என்றும், பயணச்சீட்டு வழங்குமிடத்தில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர். இது தவிர, இணையவழியிலும் முன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.