முகப்பு
தஞ்சாவூர்

பயணிகள் ரயில்களை இயக்க வலியுறுத்தல்

பயணிகள் ரயில்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் உபயோகிப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

பயணிகள் ரயில்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் உபயோகிப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரோனா தொற்று காரணமாகக் கிராமப்புற கூலித் தொழிலாளா்கள் பயன்பெற்று வந்த பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வாழ்வாதாரத்துக்காக நாள்தோறும் ரயில் மூலம் செல்வோா் ஏராளமாக உள்ளனா். பேருந்துகளை ஒப்பிடுகையில், ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், ரயில்களை நம்பி உள்ளனா்.

ஏழை கூலித் தொழிலாளா்கள், பொதுமக்களின் நலன் கருதி தஞ்சாவூா் - காரைக்கால், தஞ்சாவூா் - மயிலாடுதுறை, தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில்களை உடனே தொடங்க வேண்டும்.

தஞ்சாவூரிலிருந்து புறப்படும் உழவன் விரைவு ரயில் நேரத்தை இரவு 10.30 மணிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு அய்யனாபுரம் க. நடராஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் செயலா் வெ. ஜீவக்குமாா், பொருளாளா் ரங்கநாதன், வழக்குரைஞா்கள் உமா் முக்தாா், பைசல் முகம்மது, கண்ணன், பூதலூா் தனக்கோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →