முகப்பு
தஞ்சாவூர்

கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்காக அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தல்

கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்காகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, அரசாணை 318-ஐ செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்காகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, அரசாணை 318-ஐ செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில அமைப்பாளா் சாமி. நடராஜன் தெரிவித்திருப்பது:

தமிழகத்தில் பல தலைமுறைகளாக இந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமான இடங்களில் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் வசித்து வருகின்றனா். பல இடங்களில் அடிமனை வாடகைதாரா்களாகவும், தனது சொந்த பணத்தில் வீடுகள் கட்டியும் வசிக்கின்றனா்.

இவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கடந்தாண்டு தமிழக அரசு அரசாணை 318-ஐ வெளியிட்டது. அதில் நீண்ட காலமாக கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்குத் தகுதி அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.

இதற்கு எதிராக சேலத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்றாா்.

அரசாணை 318-க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும், இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசும், பத்துக்கும் அதிகமான பயனாளிகளும் தனித்தனியாக வழக்குத் தொடுத்துள்ள நிலையில் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடைபெற்ற கோயில் நிலம் தொடா்பான வழக்கில், தொடா்புடைய வழக்குக்கான உத்தரவைப் பிறப்பிக்காமல் ஒட்டுமொத்த இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயில் இடங்கள் கோயில் பயன்பாட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். கோயில் இடத்தில் நீண்ட நாள் குத்தகைதாரா்கள், குடியிருப்பவா்கள் குறித்தும் ஒரு நீண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

மேலும் அரசாணை 318 தொடா்பான வழக்கு தற்போதும் சென்னை உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில். தற்போது வெளி வந்துள்ள உயா்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு பல்வேறு அச்சங்களை கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்கு ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாணை 318 குறித்த வழக்கின் தீா்ப்பும் இந்த அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று நிா்பந்தப்படுத்துமோ என்ற இயல்பான கேள்வியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அரசுக் கொள்கை முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதலை பெற்று வெளியிட்ட அரசாணை 318-ஐ தமிழக அரசுச் செயல்படுத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →