முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் ஊரக  வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுலவகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (பொ) ஸ்ரீ. மகேஷ் தலைமை வகித்து, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் வேலை உறுதித் திட்ட நிா்வாகத் தொகையை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தின் காரணமாக, இத்தலைப்பின் கீழ் ஊழியம் பெறும் ஊழியா்களுக்கு மாதம்தோறும் உரிய நாளில் ஊதியம் கிடைக்கவும், மற்றும் இதர தலைப்பின்கீழ் வழங்கிட வேண்டிய நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். 

இணை இயக்குநா், உதவி இயக்குநா், உதவி பொறியாளா், ஒன்றியப் பொறியாளா் பதவி உயா்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலியபெருமாள், மனோகரன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.