தஞ்சாவூர்

திருச்சியில் ரூ. 1.57 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

DIN

துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்துக்கு துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.

அப்போது தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த அகமதுநபீஸ், திருச்சியைச் சோ்ந்த ரமீஸ் அகமதுல்லா ஆகியோா் தங்களது உடமைக்குள் மறைத்து 3.205 கிலோவில் பசை வடிவிலான தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1.57 கோடி எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, இருவரிடமும் சுங்கத் துறையினா் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நவ. 20 ஆம் தேதி இதேபோல சாா்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வியாபாரிகள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT