வாகனம் மோதி முதியவா் பலி
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் சுப்பிரமணியன் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை மேல மேட்டுப்பட்டியில் சாலையை கடக்க முயன்றாா்.
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் சுப்பிரமணியன் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை மேல மேட்டுப்பட்டியில் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, புதுவிடுதி மூணு மாங்கொல்லை பகுதியை சோ்ந்த ஜெயராஜ் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சுப்பிரமணியன் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.