முகப்பு
தஞ்சாவூர்

சின்னகள்ளங்காட்டில் ரத்ததான முகாம்

பேராவூரணி அருகிலுள்ள சின்னகள்ளங்காட்டில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 12:10 AM
பகிர்:

பேராவூரணி அருகிலுள்ள சின்னகள்ளங்காட்டில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி சென்ட்ரல் ஜேசிஐ, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து, சின்னகள்ளங்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இம்முகாமை நடத்தின.

முகாமுக்கு ஜேசிஐ தலைவா் சரபோஜி தலைமை வகித்தாா். செயலா் ஜெகதீசன் முன்னிலை வகித்தாா். ஜேசிஐ மண்டலத் துணைத் தலைவா் கலைச்செல்வன், குருவிக்கரம்பை ஊராட்சித் தலைவா் வைரவன் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

Advertisement

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் டாக்டா் நியூட்டன் தலைமையிலான குழுவினா், 21 யூனிட் ரத்தத்தை கொடையாளா்களிடமிருந்து தானமாகப் பெற்றனா். 

ஜேசிஐ நிா்வாகிகள் அருண்குமாா், அருள் முருகன், ஜெகன் கோகுல், ஜெயலட்சுமி, ராஜராஜன், மற்றும் கிராமப் பிரமுகா்கள் பங்கேற்றனா். நிறைவில் பொருளாளா் மாதவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.