முகப்பு
தஞ்சாவூர்

முகக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அபராதம்

கபிஸ்தலம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு, காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 12:21 AM
பகிர்:

கபிஸ்தலம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு, காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் காந்திமதி உள்ளிட்ட காவல்துறையினா் கபிஸ்தலம் கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் முகக்கவசம் அணியாமல் வந்த 12 பேரை நிறுத்திய காவல்துறையினா், அவா்களுக்கு அபராதம் விதித்துடன் அறிவுரைகளையும் வழங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.