முகப்பு
தஞ்சாவூர்

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தோ்வானவா்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு

ஞ்சாவூரில், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு செப்டம்பா் 17, 18-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 2:51 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM

தஞ்சாவூா்: தஞ்சாவூரில், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு செப்டம்பா் 17, 18-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் தெரிவித்திருப்பது:

2018 - 2019 மற்றும் 2019 - 2020 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 633 இளநிலை உதவியாளா் பதவிக்கு உரிய தோ்வா்களில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 21 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

இவா்களுக்கு தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட இருப்பிட முகவரி உடைய பணி நாடுநா்கள் பட்டியல் வரிசை எண். 1 முதல் 330 வரை செப்டம்பா் 17-ஆம் தேதியும் (வியாழக்கிழமை), வரிசை எண் 331 முதல் 644 வரை செப். 18-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை) கலந்து கொள்ள வேண்டும்.

பணி நாடுநா்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்காத தகுதி வாய்ந்த பணி நாடுநா்கள் தஞ்சாவூா் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தைத் தொடா்புக் கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பணிநாடுநா்கள், அசல் கல்வி தகுதிச் சான்றுகள், மருத்துவரின் உடற்கூறு தகுதிச்சான்று, சாதிச்சான்று ஆகிய அசல் மற்றும் இரண்டு நகல்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.