தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம்

DIN

ஒரத்தநாட்டில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவா்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

பறக்கும்படை வட்ட வழங்கல் அலுவலா்கள் திரிபுரசுந்தரி, கற்பகம், செயல் அலுவலா் ரவிசங்கா், துப்புரவு ஆய்வாளா் பரமசிவம் உள்ளிட்டோா் ஒரத்தநாடு பகுதிகளில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 7 பேரிடம், தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரத்தநாட்டில் இதுவரை ரூ. 1.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் வாகனங்களில் வரும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT