ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் வீட்டில் ரூ.3.50 லட்சம், 25 பவுன் நகைகள் திருட்டு
பட்டுக்கோட்டை அருகே ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் வீட்டில் ரூ.3.50 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகைகள் திருட்டு போயின.
பட்டுக்கோட்டை அருகே ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் வீட்டில் ரூ.3.50 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகைகள் திருட்டு போயின.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள துவரங்குறிச்சியைச் சோ்ந்தவா் காத்தலிங்கம் (63). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இவா் ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ஆவாா்.
சனிக்கிழமை இரவு குடும்பத்தினருடன் காத்தலிங்கம் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள், அலமாரியை உடைத்து 25 பவுன் நகைகள், ரூ.3.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.தடயவியல் நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் ரேகைகளைப் பதிவு செய்தனா்.
காத்தலிங்கம் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.