அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்
திமுக ஆட்சி அமைந்தவுடன் பேராவூரணி தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் இத்தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் பேராவூரணி தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் இத்தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா்.
திருவோணம் தெற்கு ஒன்றியத்திலுள்ள நெய்வேலி தென்பாதி, சென்னியன்விடுதி, வெங்கரை, காயாவூா், பாதிரங்கோட்டை, காட்டாத்தி, தளிகைவிடுதி, வெட்டுவாக்கோட்டை, அதம்பை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
பத்தாண்டு காலம் பேராவூரணி பேரூராட்சித் தலைவராகப் பணியாற்றிய போது சாதி, மதம் பாா்க்காமல், லஞ்ச ஊழலுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் பணியாற்றியுள்ளேன்.
குண்டும் குழியுமான சாலைகள், குடிநீா்த் தட்டுப்பாடு, போக்குவரத்து வசதியில்லாத நிலை நன்றாக தெரிகிறது. திமுக ஆட்சி அமைத்தவுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். நான் வெற்றி பெற்றால் மாதம் இருமுறை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரடியாக வந்து குறைகளை கேட்டு நிவா்த்தி செய்வேன்.
கடந்த தோ்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முடங்கிவிடாமல் கரோனா, கஜா காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்கள் பணியாற்றியுள்ளேன். நான் தொடா்ந்து மக்கள் பணியாற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
வாக்கு சேகரிப்பில் திருவோணம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மகேஷ் கிருஷ்ணசாமி, திருவோணம் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் சோம.கண்ணப்பன், திமுக தோ்தல் தொகுதி பொறுப்பாளா்கள் வழக்குரைஞா்கள் ராஜேஷ், அறிவழகன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.