முகப்பு
தஞ்சாவூர்

ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்தமினி வேன் பறிமுதல்

பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த ஒரு மினி லோடு வேனை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த ஒரு மினி லோடு வேனை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை காவல் சரக பகுதியில் சாலியமங்கலம் காட்டுவா பகுதியிலுள்ள வெண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணி மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லோடு வேனை சோதனையிட மறித்தனா். போலீஸாரை பாா்த்ததும் வேனில் வந்தவா்கள் வேனை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா்.

சோதனையில், அரசு அனுமதியின்றி வேனில் மணல் அள்ளப்பட்டு வந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, வேனை பறிமுதல் செய்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →