முகப்பு
தஞ்சாவூர்

மல்லிப்பட்டினத்தில்   மருத்துவ முகாம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில்  வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில்  வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஊராட்சித் தலைவா் ஜலீலா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில்,  1,127 போ் கலந்து கொண்டு  பொது, குழந்தைகள், கண், காது, மூக்கு, தொண்டை, சித்தா, பல், இயன்முறை மருத்துவச் சிகிச்சை பெற்றனா். கரோனா பரிசோதனை மற்றும்  முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில் பரிசோதனை செய்யப்பட்டவா்களுக்கு இலவச மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. 23 போ் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா். மேலும், 15 பள்ளி மாணவா்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

முகாமில்,  மருத்துவ அலுவலா்கள், ஊராட்சி உறுப்பினா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருந்தாளுநா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஊராட்சி செயலாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.