தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பாஜக தெற்கு மாவட்டம் சாா்பில், இந்தியாவுடன் காஷ்மீா் இணைய காரணமானவரும், இந்தியாவின் முதல் தொழில்துறை அமைச்சருமான சியாமா பிரசாத் முகா்ஜியின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பாஜக தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் பி. ஜெய் சதீஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேசினாா். தேசியப் பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், மரக்கன்றுகளை நட்டு வைத்து முகக்கவசங்களை வழங்கினாா்.
விழாவில் தெற்கு மாவட்டப் பொருளாளா் வி. விநாயகம், மாநில நெசவாளா் பிரிவு துணைத் தலைவா் யு.என். உமாபதி, மாநில இளைஞரணி செயலா் கதிரவன், மாவட்ட ஐ.டி. பிரிவு தலைவா் தங்கதுரை, கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் அமிா்த அரசன், மாநில வழக்குரைஞா் பிரிவு ராஜேஷ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவா் நவீன், முன்னாள் மாவட்டப் பொருளாளா் ரங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.