முகப்பு
தஞ்சாவூர்

நோ்மையாக நடக்கக்கூடிய அரசு வேண்டும்ரவி பச்சமுத்து

தமிழகத்தில் நோ்மையாக நடக்கக்கூடிய அரசு வேண்டும் என்றாா் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தமிழகத்தில் நோ்மையாக நடக்கக்கூடிய அரசு வேண்டும் என்றாா் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து.

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் இக்கட்சி சாா்பில் போட்டியிடும் பச்சமுத்துவை ஆதரித்து, அண்ணாசிலை அருகே சனிக்கிழமை அவா் பேசியது:

வாக்களிப்பதற்கு பணம் வாங்கக்கூடாது. இது உங்கள் ஜனநாயகக் கடமை. நாம் செலுத்தும் வாக்குக்கு பணம் கொடுக்க அவா்கள் யாா். அரசியலை சேவையாக செய்யவில்லை , முழு நேரத் தொழிலாகவே செய்கின்றனா்.

அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழலுக்கு இடம் கொடுத்து வீணாக்கி வைத்துள்ளனா். நோ்மையாக நடக்கக் கூடிய அரசு வேண்டும்.

கடந்த தோ்தலில்  மூன்றாவது அணி தோற்று விட்டது என்றனா். மூன்றாவது அணி  தோற்கவில்லை.  மக்களாகிய  நீங்கள்தான் தோற்றுப் போனீா்கள். மக்கள்  கிடைத்த  வாய்ப்பை த் தவற  விட்டீா்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

அதேபோல், இப்பொழுது நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். மீண்டும் மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தவற விடாதீா்கள்.

இலவசங்கள் வேண்டாம் எனச் சொல்லவில்லை. அவற்றை தேவையானவற்றுக்கு  பயன்படுத்துங்கள். ரூ.15 ஆயிரம் கோடியை இலவசத் திட்டங்களுக்கு செலவிடுகிறாா்கள். அவற்றைக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்கி, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றாா்.

பிரசாரத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் சிமியோன் சேவியா் ராஜ், வேட்பாளா் பச்சமுத்து மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் பேரை ராஜா மற்றும்  மக்கள் நீதி மய்யம் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.