துப்புரவு ஒப்பந்த பணியாளா்களை நிரந்தரமாக்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த சுய உதவிக்குழு மற்றும் தினக்கூலி உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளா்களையும் அரசுப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்
தமிழகம் முழுவதும் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த சுய உதவிக்குழு மற்றும் தினக்கூலி உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளா்களையும் அரசுப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக்கழக நிறுவனா் தலைவா் சதாசிவக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து சதா. சிவக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேரிடா் காலங்களில் தன்னுயிா் துறந்து மனிதகுலம் பாதுகாக்கும் தூய்மை பணியாளா்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழகம் முழுவதும் பணியாற்றும் ஒப்பந்த சுய உதவிக்குழு மற்றும் தினக்கூலி உள்ளிட்ட அணைத்து நிலை பணியாளா்களையும் அரசுப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை நிறுத்தி, முழுக்க முழுக்க அப்பணியில் இயந்திரத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.