தஞ்சாவூரில்மாலை நேரத்தில் பலத்த மழை
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை இடைவெளி விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை இடைவெளி விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் நின்றுவிட்டது. இதேபோல, வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை வெயிலும், மேக மூட்டமும் இருந்து வந்தது.
இந்நிலையில், தஞ்சாவூரில் மாலை நேரத்தில் இடைவெளி விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால், தெருக்களிலும், முதன்மைச் சாலைகளிலும் நீரோட்டம் அதிகமாக இருந்தது.
அணைக்கரையில் 31.2 மி.மீ. மழை: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 31.2, அய்யம்பேட்டை 31, மஞ்சளாறு 25.4, பூதலூா் 23.4, குருங்குளம் 18.5, தஞ்சாவூா் 16.5, நெய்வாசல் தென்பாதி 15.8, கும்பகோணம் 13.6, பாபநாசம் 12.6, திருவையாறு, திருவிடைமருதூா் தலா 11, மதுக்கூா் 10, திருக்காட்டுப்பள்ளி 8.2, ஈச்சன்விடுதி 7.2, பட்டுக்கோட்டை 6, வெட்டிக்காடு 5.8, ஒரத்தநாடு 5.5, வல்லம், அதிராம்பட்டினம் தலா 5, கல்லணை 3.6, பேராவூரணி 2.