முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதியில் பலத்த மழை

 பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

 பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, நடுவிக்கோட்டை, அலிவலம், கழுகப்புளிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் பலத்த மழை பெய்தது. மேலும், மாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், சில இடங்களில் மரங்கள் முறிந்து சாய்ந்தன. கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. பட்டுக்கோட்டை நகரப் பகுதியின் முக்கிய சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாது பெய்த பலத்த மழையால் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.