தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோயில் குடமுழுக்கு விழா

DIN

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராகு பரிகாரத் தலமான இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது ரூ. 5 கோடி செலவில் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இக்குடமுழுக்கு விழா கணபதி ஹோமத்துடன் அக்டோபர் 19-ஆம் தொடங்கியது. இதில் அக்டோபர் 21-ஆம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜையும், அக்டோபர் 22-ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், சனிக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றன.

இதைதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜையும், திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கும், காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT