முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மீட்கப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.
பகிர்:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மீட்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வந்த இவர் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டார். இதைப்பார்த்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று மணிகண்டனை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

இவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தான் பட்டுக்கோட்டை நகராட்சியில் வேலை பார்த்தபோது, தன் மீது மோட்டார் காணாமல் போனது தொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தனக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது வேலை தர வேண்டும் என பலமுறை கோரியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார். இதையடுத்து மணிகண்டனை காவல்துறையினர் தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.