பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி விவசாயி சாவு
சாலியமங்கலத்திலிருந்து பாபநாசம் நோக்கி வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியது.
பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்த விவசாயி பாலையன் (60). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாபநாசம் - சாலியமங்கலம் சாலையை கடக்க முயன்ற போது, சாலியமங்கலத்திலிருந்து பாபநாசம் நோக்கி வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாலையன், பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு
சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள், தலைமை காவலா் குமாா் உள்ளிட்டோா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.