தஞ்சாவூர் அருகே காதல் பிரச்னை: இளைஞர் கொலை
தஞ்சாவூர் அருகே காதல் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்தஞ்சாவூர் அருகே காதல் பிரச்னை: இளைஞர் கொலை
தஞ்சாவூர் அருகே காதல் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காதல் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ஆனந்த் (21). இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவியைக் காதலித்து வந்தார்.
இதற்கு மாணவி வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்தது. இதுதொடர்பாக ஆனந்தை மாணவியின் உறவினர்கள் அழைத்து கண்டித்தனர். என்றாலும் மாணவியை ஆனந்த் தொடர்ந்து காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தகராறில், ஆனந்த் அரிவாளால் வெட்டப்பட்டும், கம்பால் தாக்கப்பட்டும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்த் அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து சூரக்கோட்டையைச் சேர்ந்த ஞானசேகர் மகன் உதயகுமார் (25) உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.