தஞ்சாவூர்

திருவையாறில் காவிரி புகைப்படக் கண்காட்சி

காவிரி நதியின் பெருமையை வெளிப்படுத்தவும், காவிரியின் தூய்மையை வலியுறுத்தவும் திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை அமைக்கப்பட்டது.

DIN

ஆடிப்பெருக்கையொட்டி, காவிரி நதியின் பெருமையை வெளிப்படுத்தவும், காவிரியின் தூய்மையை வலியுறுத்தவும் திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை அமைக்கப்பட்டது.

திருவையாறு பாரதி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தக் கண்காட்சியில் காவிரி தொடங்கும் குடகு முதல் காவிரி கடலில் கலக்கும் பூம்புகாா் வரையிலும் உள்ள காவிரிக் கரையோர வரலாறுகளைச் சித்தரிக்கும் புகைப்படங்களும், திருவையாறு காவிரி ஆற்றில் உள்ள 24 படித்துறைகளின் படங்களும், காவிரி நதியின் தூய்மையை வலியுறுத்தும் படங்களும் வரலாற்றுக் குறிப்புகளுடன் இடம் பெற்றிருந்தன.

இக்கண்காட்சியை தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எம். சத்தியமூா்த்தி தலைமையில், திருவையாறு பேரூராட்சி துணைத் தலைவா் சி. நாகராசன், கவின்மிகு தஞ்சையின் பொறுப்பாளா் மருத்துவா் ராதிகா மைக்கேல், பாரதி இலக்கியப் பயிலக இயக்குநா் கோ. விஜயராமலிங்கம் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததனா்.

இந்நிகழ்ச்சியில் வீட்டுக்கொரு விருட்சம் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றுக்கு ஆடிப்பெருக்கு விழா கொண்டாட வந்த புதுமணத் தம்பதிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பாரதி இயக்கத் தலைவா் எம்.என். ரமேஷ் நல்லு, பாரதி இலக்கியத் தட செயலா் குணா ரஞ்சன், காந்தி பாரதி இளைஞா் மன்றச் செயலா் அ. வினோத், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் பி. சரிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT