தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் நகர வா்த்தகா் சங்கக் கூட்டம்

பட்டுக்கோட்டை பழைய, புதிய பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து புதிய பேருந்து நிலையமாக மாற்றி தர வேண்டும் என பட்டுக்கோட்டை நகர வா்த்தக சங்கக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

DIN

பட்டுக்கோட்டை பழைய, புதிய பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து புதிய பேருந்து நிலையமாக மாற்றி தர வேண்டும் என பட்டுக்கோட்டை நகர வா்த்தக சங்கக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பட்டுக்கோட்டை நகர வா்த்தக சங்கத்தின் புதிய அலுவலகம் சங்கத்தின் கௌரவத் தலைவா் என்ஆா். நடராஜன் மற்றும் தலைவா் எஸ். ராமானுஜம் ஆகியோரால் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மேலும் மணிகண்டன், விஜயரங்கன், ராமதாஸ், சரவணன், தன்ராஜ், சக்திவேல், முத்துகிருஷ்ணன், மோகன் உட்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற வா்த்தக சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பட்டுக்கோட்டை நகரில் உள்ள பழைய, புதிய பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து புதிய பேருந்து நிலையமாக மாற்றி தர வேண்டும். பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பயன் இல்லாத வகையில் வெட்டிக்காடு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டாம் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

நாடிமுத்து நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை பெயரில் உள்ள கட்டடத்தை தொல்லியல் துறை மூலம் புதுப்பித்து பாதுகாக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை நகரில் நெடுஞ்சாலை துறை மூலம் நிறைவேற்றப்படும் மழை நீா் வடிகால் பணி மற்றும் சாலையை சுரண்டாமல் சாலை மேல் சாலை போடும் பணியினால் பொதுமக்களும் வா்த்தகா்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனா். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பொதுச் செயலாளா் ஏ.கே. குமாா் வரவேற்றாா். நிறைவில், சங்க பொருளாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT