முகப்பு
தஞ்சாவூர்

சொக்கநாதபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சியில் மக்களைத் தேடி சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சியில் மக்களைத் தேடி சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் ராம்பிரசாத் தலைமை வகித்தாா்.   வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தொற்றுநோய் மருத்துவ அலுவலா் ஆடலரசி முன்னிலை வகித்தனா்.

சேதுபாவாசத்திரம்  ஒன்றியக் குழுத்  தலைவா் மு.கி.முத்துமாணிக்கம்  முகாமைத் தொடக்கி வைத்தாா்.  வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம், மைக்ரோ பயாலஜிஸ்ட் குருநாதன், சிறப்பு மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள்  உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். முகாமில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஊராட்சித் துணைத் தலைவா் பானுமதி, உறுப்பினா்கள், கிராமப் பிரமுகா்கள், அரசு அலுவலா்கள், சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.